< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|18 July 2022 12:03 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், மஞ்சள் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து சுவாமிக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல கரூர் பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவில், அரசுகாலனி மகாபுற்றுக்கண் மாரியம்மன் கோவிலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதேபோல் வேலாயுதம்பாளையம் மகாமாரியம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில், வெள்ளியணை தேவி கருமாரியம்மன் கோவில்,தோகைமலை அருகே உள்ள கழூகூர் ஊராட்சி கிழக்கு கருமாரியம்மன் கோவிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.