< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|17 July 2022 11:22 PM IST
சங்கராபுரம் பகுதி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே பூட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை, பெரியநாயகி அம்மன், மகாநாட்டு மாரியம்மன், சங்கராபுரம் வாசவியம்மன், புற்று மாரியம்மன், நாகாத்தம்மன் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.