கரூர்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மாசி மாத கடைசி பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காணப்பட்டது. இதேபோல் குந்தாணிபாளையம் நத்தமேடு, புன்னம், சேமங்கி, நொய்யல், அத்திப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு தீபாராதனை நடந்தது.
இதேபோல் தோைகமலை அருகே கழுகூர் அ.உடையாப்பட்டி கிழக்கு பகுதியில் மகா கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி அம்மனுக்கு பால், தயிர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.