< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|14 Oct 2023 1:18 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏழாயிரம்பண்ணை கருகாத்த கருமாரியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியபொடி உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அதேபோல கீழச்செல்லையாபுரம் செல்லியம்மன் கோவில், சுந்தாளம்மன் கோவில், வனமூர்த்திலிங்கபுரம் காளியம்மன் கோவில், சத்திரப்பட்டியில் சக்தி மாரியம்மன் கோவில், மடத்துப்பட்டி காளியம்மன் கோவில், செவல்பட்டி காளியம்மன் கோவில், மீனாட்சிபுரம் மாரியம்மன் கோவில், துரைச்சாமிபுரம் ராஜகாளியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.