< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் ஏரிக்கரையில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் பூட்டை மாரியம்மன் கோவில், சங்கராபுரம் வாசவி அம்மன், புற்றுமாரியம்மன், நாக தேவதையம்மன், தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன், மகாநாட்டு மாரியம்மன் கோவில் உள்பட சங்கராபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிமுதல் பகல் 12 மணிவரை ராகுகால பூஜை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ஸ்ரீ விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீ சிவதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷோக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்