< Back
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
20 May 2022 12:17 AM IST

விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

நொய்யல்,

நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருணகணபதி கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் புன்னம், சேமங்கி, மரவாபாளையம், குறுக்குச்சாலை, அத்திபாளையம் உள்ளிட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்கள், அருகம்புல்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை அடிவாரத்தில் உள்ள விநாயகர், ஓம் சக்திநகர் கற்பக விநாயகர், ஈ.ஐ.டி பாரி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்