< Back
மாநில செய்திகள்

திருவாரூர்
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் வழிபாடு.

19 Oct 2023 12:05 AM IST
விநாயகர் கோவில்களில் வழிபாடு நடந்தது
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வடபாதிமங்கலம் புனவாசல் மழுப்பெருத்த விநாயகர் கோவிலில் நேற்று சதுர்த்தி விரத வழிபாடு நடைபெற்றது. இதில், சாமிக்கு பால், தயிர், தேன், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது.பின்னர், சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், உச்சுவாடி நர்த்தன விநாயகர், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜவிநாயகர், பழையனூர் வெள்ளை விநாயகர், அதங்குடி நவசக்தி விநாயகர் மற்றும் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தி விரத வழிபாடு நடைபெற்றது.