< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|18 Oct 2023 11:06 PM IST
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நொய்யல் அருகே முத்தனூர் வருணகணபதி ேகாவிலில் சதுர்த்தியையொட்டி சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதேபோல் சேமங்கி, அத்திப்பாளையம், புன்னம் சத்திரம், புன்னம், உப்பு பாளையம் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.