< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஓசூரில் கல்வி, கலை வளர்ச்சிகாக சிறப்பு வழிபாடு; குழந்தைகள் கையால் அம்மனுக்கு அபிஷேகம்
|10 July 2022 3:44 PM IST
இந்த சிறப்பு வழிபாட்டில் 7 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கல்யாண காமாட்சி அம்மன் கோவிலில் குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்க சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் 7 வயது வரை உள்ள குழந்தைகள் தங்கள் கைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
பால், தயிர், குங்குமம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவை கொண்டு அம்மனுக்கு குழந்தைகள் அபிஷேகம் செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.