< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|14 Aug 2022 12:20 AM IST
வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
நஞ்சை புகழூர் அக்ரஹாரத்தில் ராகவேந்திர மடத்தின் பின்பகுதியில் வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று ஆடி கடைசி சனிக்கிழமையையொட்டி அக்னிகுண்டம் வைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி கணபதி ஹோமம் செய்தனர். தொடர்ந்து வரசித்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.