< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு
|21 Sept 2023 11:40 PM IST
வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.