< Back
மாநில செய்திகள்
உருட்டுக்கல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

உருட்டுக்கல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
19 Jun 2022 5:15 PM IST

ஏலகிரிமலை கோட்டூர் கிராமத்தில் உள்ள உருட்டுக்கல் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஏலகிரிமலையில் கோட்டூர் கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் பிரசித்தி பெற்ற உருட்டுக்கல் பெருமாள் கோவில் உள்ளது.

உருட்டுக்கல் பெருமாளை அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் 4 தலைமுறையாக வழிபட்டு வருகிறார்கள். இதுதவிர ஏலகிரிமலைக்கு சுற்றுலா வருவோரும் கோவிலுக்கு ெசன்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் வைக்கும் வேண்டுதல்களை இப்பெருமாள் செவிசாய்த்து உடனுக்குடன் நிறைவேற்றி வருவதாக பக்தர்கள் கூறுகிறார்கள். தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து வழிபட்டு செல்கிறார்கள்.

உருட்டுக்கல் பெருமாள் கோவில் காட்டுப்பகுதியில் இருப்பதால் சரிவர யாருக்கும் தெரியாது. எனினும், பெருமாளின் கீர்த்தியை அறிந்த ஏராளமான பக்தர்கள், அங்குள்ள மலைவாழ் மக்கள் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கோவிலுக்கு வந்து உருட்டுக்கல் ெபருமாளை வழிபட்டு செல்கிறார்கள்.

அதன்படி சனிக்கிழமை அன்று உருட்டுக்கல் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மாவட்ட கவுன்சிலர் சிந்துஜாஜெகன் மற்றும் திரளான பக்தர்கள் அடர்ந்து காட்டுப்பகுதியில் 4 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று உருட்டுக்கல் பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்