< Back
மாநில செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

ஆங்கில புத்தாண்டையொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருக்கோவிலூர்

ஆங்கில புத்தாண்டுபிறப்பையொட்டி திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தியாகலிசபெருமாள் நாச்சியார் கோலத்தில் காட்சியளித்தார். மேலும் பகல் பத்து உற்சவத்தில் நிறைவு நாளான நேற்று சாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

அதேபோல் கீழையூர் சிவானந்தவல்லி உடனுறை விரட்டானேஸ்வரர், திருக்கோவிலூர் கிழக்கு தெருவில் உள்ள ஆஞ்சநேயர், என்.ஜி.ஜி.ஓ. நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், கீழையூர் மாரியம்மன் கோவில் மற்றும் திருக்கோவிலூரை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

மேலும் செய்திகள்