< Back
மாநில செய்திகள்
தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
9 Oct 2022 12:15 AM IST

கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் மிகவும் பழமை வாய்ந்த தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு மூலவர் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் மண்டபத்தில் உற்சவர் தில்லை ஸ்ரீதேவி, பூதேவி சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர்.

மேலும் செய்திகள்