திண்டுக்கல்
ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|வேடசந்தூர் அருகே ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள கே.புதூர் சிவகிரி மலையடிவாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்படிகலிங்கேஸ்வரர், பஞ்சலிங்கேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. பின்னர் பல்வேறு புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை அலங்கார கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 3-ம் பிறை சந்திர தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிவகிரி மலையை சுற்றி பக்தர்கள் பால்குடத்துடன் கிரிவலம் வந்து ஸ்படிகலிங்கேஸ்வரர், பஞ்சலிங்ககேஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.