< Back
மாநில செய்திகள்
சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
14 July 2023 1:30 AM IST

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திண்டுக்கல் பாரதிபுரம் சீரடி சாய்பாபா கோவிலில் வாரந்தோறும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், சீரடி சாய்பாபாவுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் தாங்களே சாய்பாபா சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்தனர். பின்னர் நடந்த பஜனை நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்று பக்தி பாடல்கள் பாடினர். அதைதொடர்ந்து பக்தர்களுக்கு 3 வேளையும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி முருகன் செய்திருந்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்