< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|6 March 2023 12:08 AM IST
சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்- விளந்தையில் அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி மேலஅகத்தீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்புள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் கோவில் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீசுவர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் சனி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.