< Back
மாநில செய்திகள்
சேங்கல்மலை சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு
கரூர்
மாநில செய்திகள்

சேங்கல்மலை சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
4 Aug 2022 11:43 PM IST

சேங்கல்மலை சொர்ண பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தோட்டக்குறிச்சி சேங்கல்மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. அப்போது பக்தர்கள் தாங்கள் அணிந்திருந்த தங்கநகைகளை பூஜையில் வைப்பதற்கு கொடுத்து திரும்ப பெற்று கொண்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்