< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ரேணுகாதேவி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|8 Dec 2022 12:30 AM IST
இடையக்கோட்டை அருகே ரேணுகாேதவி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
இடையக்கோட்டை அருகே நாரப்பநாயக்கன்பட்டியில் பழமை வாய்ந்த ரேணுகாதேவி அம்மன் புற்று கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை பவுர்ணமியையொட்டி பக்தர்கள் புற்றுக்கு பால் ஊற்றியும், மலர்களால் அலங்காரம் செய்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அச்சம்மாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.