< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு
|24 Oct 2022 12:00 AM IST
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் மாவட்டம் புகழிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் குடமுழுக்கு விழா நடத்தப்படுவதற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக நேற்று புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.