< Back
மாநில செய்திகள்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 Oct 2023 12:19 AM IST

வாலிகண்டபுரம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 6 மணிக்கு சேத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பெருமாள் கோவிலுக்கு கவச வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து கோவிலில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் நடந்தது. பின்னர் 9 மணி முதல் 11 மணி வரை பிரசன்ன வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், கோதை ஆண்டாள் நாச்சியார் ஆகிய மூலவர்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மூலவர்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க முலாம் பூசிய கவசம் அணிவிக்கப்பட்டு, மதியம் 12 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவில் சுவாமி வீதியுலாவும் நடந்தது.

மேலும் செய்திகள்