< Back
மாநில செய்திகள்
பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
5 Oct 2023 12:15 AM IST

தலைஞாயிறு அருகே பிடாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

வாய்மேடு:

தலைஞாயிறை அடுத்த ஓரடியம்புலத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்