< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|9 Aug 2022 12:21 AM IST
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே கோம்புபாளையம் பகுதியில் சீனிவாச பெருமாள் சமேத மூதேவி சீதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆடி மாத ஏகாதசியை முன்னிட்டு சீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்கள் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குற்ச்சி சேங்கல்மலை வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் மற்றும் துளசியால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.