நாகப்பட்டினம்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|நாகையில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதேபோல் வெளிப்பாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஆபரணதாரி நாராயண பெருமாள் கோவில், அந்தணப்பேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவில், நாகூர் வெங்கடபிரசன்ன பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. திருமருகல் வரதராஜ பெருமாள் கோவில், தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாககோடையான் சீனிவாச பெருமாள் கோவில், கோவில்பத்து என்னை ஆளும் கண்ணபெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேதாரண்யம் ஞாயிறு சந்தைதோப்பு தேவி திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வெங்கடாஜலபதி சாமிக்கு கம்ப சேவை விழா நடந்தது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பந்தலில் வைக்கப்பட்டிருந்த ராமர், சீதா, லட்சுமணன் படத்திற்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.