விருதுநகர்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. தென்திருப்பதி என அழைக்கப்படும் இந்த கோவிலில் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.விருதுநகர், மதுரை, கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் விலக்கு அபயவரத ஆஞ்சநேயர் கோவில், விருதுநகர் சீனிவாச பெருமாள் கோவில், ராஜபாளையத்தில் அமைந்துள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானம் அலுவலகத்தில் உள்ள பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள வரதராஜ பெருமாள், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் உள்ள பெருமாள், திருநகரம் மலையரசன் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பாளையம்பட்டி வேணுகோபால சுவாமி, ஆலங்குளம் வரதராஜபெருமாள் கோவில், கல்லமநாயக்கர்பட்டி சோலைமலை சுந்தரராஜ பெருமாள் கோவில், நதிக்குடி திருவேங்கட பெருமாள் கோவில், அக்கரைப்பட்டி நவநீத பெருமாள் கோவில், கீழராஜகுலராமன் ராஜகுல பெருமாள் கோவில், காக்கிவாடன்பட்டி வெங்கடேச பெருமாள் கோவில், புலிப்பாரை பட்டி வரதராஜபெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஏழாயிரம்பண்ணை விண்ணகர பெருமாள் கோவில், அச்சங்குளம் சீனிவாசபெருமாள் கோவில், எலுமிச்சங்காய்ப்பட்டி சீனிவாச பெருமாள் கோவில், சுப்பிரமணியபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உள்ள பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.அதேபோல சிவகாசி வெங்கடாஜலபதி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுவாமி சயன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.