திருநெல்வேலி
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புரட்டாசி 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இந்தநிலையில் நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பாளையங்கோட்டை அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் காலையில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேல திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், நெல்லை திருப்பதி, டவுன் கரிய மாணிக்க பெருமாள் கோவில், லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், சி.என்.கிராமம் ராஜ கோபால சுவாமி கோவில் மற்றும் காட்டுராமர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
சிறப்பு பஸ்கள்
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 7 மணி அளவில் சிறப்பு பஸ்களில் பக்தர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்தார்கள்.