திருவாரூர்
பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
கூத்தாநல்லூர், நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வார வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள் பொடி திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்கு வடமாலை, அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கோவிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயர் மற்றும் லெட்சுமாங்குடி ஜெய சக்தி ஆஞ்சநேயர் கோவில்களிலும் அபிேஷக ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.