< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பெரியக்காண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|16 Oct 2023 1:55 AM IST
பெரியக்காண்டியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காட்டுப்புத்தூர்:
தொட்டியம் அருகே எலந்தமடைப்புத்தூரில் உள்ள பெரியகாண்டி அம்மன் கோவிலில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. இதில் தொட்டியப்பட்டி பழனிச்சாமி நாயக்கர் தலைமையில் உறுமி மேளத்துடன் ஒயிலாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் சந்திரசேகர், வேந்தன்பட்டி பொன்னம்பலம் பூசாரி, நடராஜன், கனகராஜ், மோகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் தொட்டியப்பட்டி, எலந்தமடைப்புத்தூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.