< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|20 Feb 2023 12:20 AM IST
முனீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவரங்குளம் அருகே பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி முனீஸ்வரருக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.