< Back
மாநில செய்திகள்
மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
11 Feb 2023 12:15 AM IST

மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், மேலும் விசேஷ நாட்களிலும் நடை திறப்பது வழக்கம். நேற்று தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மதுரகாளியம்மன் மகா அபிஷேக அறக்கட்டளை சார்பில், நேற்று 49-வது ஆண்டு மகா அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று காலை சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பெரம்பலூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் வருகிற 18-ந் தேதி மகா சிவராத்திரி அன்று இரவு 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், தமிழ் புத்தாண்டையொட்டி வருகிற ஏப்ரல் மாதம் 14-ந்தேதி அம்மனுக்கு 1,008 இளநீர் அபிஷேகமும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்