< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|27 Jun 2022 11:54 PM IST
சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வேலாயுதம்பாளையம் கடைவீதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் தேய்பிறை சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்பட 16 வகையான வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதேபோல் காகிதபுரம் வல்லபை கணபதி, புகழிமலை விநாயகர், ஓம் சக்தி நகர் கற்பக விநாயகர், அய்யப்பன் கோவில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.