< Back
மாநில செய்திகள்
பந்தல்குடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை
விருதுநகர்
மாநில செய்திகள்

பந்தல்குடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை

தினத்தந்தி
|
18 Aug 2023 12:20 AM IST

உலக நன்மை வேண்டி பந்தல்குடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டை,

உலக நன்மை வேண்டி பந்தல்குடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைபெற்ற சிறப்பு ஆராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சாய்பாபா கோவில்

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் அமைந்துள்ளது.

இங்கு பந்தல்குடி, அருப்புக்கோட்டை, செட்டிகுறிச்சி செட்டிபட்டி, வாழ்வாங்கி, சேதுராஜபுரம், சிதம்பராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தநிலையில் உலக நன்மை வேண்டி பந்தல்குடி அன்பு மாடல் நகர் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

சிறப்பு அலங்காரம்

முன்னதாக சீரடி சாய்பாபாவிற்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் பாபாவின் பக்தி கீர்த்தனைகளை பாட தீப, தூப மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பந்தல்குடி சாய்ராம் டிரஸ்ட் நிறுவன தலைவர் மனிதத்தேனீ சுந்தரமூர்த்தி செய்திருந்தார்.

மேலும் செய்திகள்