< Back
மாநில செய்திகள்
அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு
திருச்சி
மாநில செய்திகள்

அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
11 Oct 2023 1:04 AM IST

அய்யப்பன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

துவாக்குடி:

பாய்லர் ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் நாகராஜா பூஜை மற்றும் சர்ப்ப பலி பூஜை நடைபெற்றது. இதில் 50 கிலோ அரிசி மாவு மற்றும் மஞ்சள் பொடியில் நாக படம் வரைந்து, பொங்கல் வைத்து இளநீர் மற்றும் வாழைத்தண்டில் தீபம் ஏற்றி லட்சார்ச்சனை நடந்தது. முன்னதாக நாகராஜன் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். நாகராஜா பூஜை செய்வதால் சர்ப்ப தோஷம் விலகுவதுடன், அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கும், திருமண தடை நீங்கும், புத்திர சம்பத்து, சவுபாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த பூஜையில் பாய்லர் வளாகம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்