< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|22 Dec 2022 11:45 PM IST
அகத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம்- விளந்தை அறம்வளர்த்தநாயகி தர்மசம்வர்த்தினி மேல அகத்தீஸ்வரர் கோவிலில்உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திருக்களப்பூர் திருக்கோடிவனத்தீசுவர், விளந்தை அழகு சுப்பிரமணியர், கூவத்தூர் விஸ்வநாதர், அழகாபுரம் அழகாபுரீஸ்வரர், பெரிய கிருஷ்ணாபுரம் ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் கோவிலில் உள்ள திருநீலகண்டேஸ்வரர் ஆகிய சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.