< Back
மாநில செய்திகள்
ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு...
நாமக்கல்
மாநில செய்திகள்

ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு...

தினத்தந்தி
|
18 Jun 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆனி மாத அமாவாசை

நாமக்கல் மாவட்டத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. பாண்டமங்கலம் அருகே உள்ள கோப்பணம்பாளையம் அரசாயி அம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய்இடையாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிபாட்டு மக்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

வராகி அம்மன்

இதேபோல் நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள வராகி அம்மன் ஆனி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

நாமகிரிப்பேட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், நெடுஞ்சாலையில் உள்ள மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில், ஆர்.புதுப்பட்டி சூடாமணி அம்மன் கோவில், ஒடுவன் குறிச்சி காளியம்மன் கோவில் ஆனி மாத அமாவாசையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நெடுஞ்சாலையில் உள்ள மெட்டாலா ஆஞ்சநேயர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதில் பக்தர்கள் துளசி மாலை சாத்தி தரிசனம்செய்தனர்.

மேலும் செய்திகள்