தர்மபுரி
கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் தரிசனம்
|தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு யாக பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. பின்னர் யாக சாலையில் இருந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் சனி பகவானுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில் வளாகத்தில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி நவகிரக சன்னதியில் சனீஸ்வர பகவானுக்கு கலசஸ்தாபனம், விக்னேஸ்வர பூஜை, நவகிரக ஹோமம், சனிஸ்வர ஹோமம் நடந்தது. தொடர்ந்து சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ சனி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாற்றி அர்ச்சனை, சோடச உபசாரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது ராசிக்கேற்ப பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அதியமான்கோட்டை
இதேபோன்று பிரசித்தி பெற்ற அதியமான்கோட்டை தட்சனகாசி காலபைரவர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த விழாவில் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜை, பரிகார பூஜை நடைபெற்றது. பின்னர் சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடந்தன. பின்னர் சனி பகவானுக்கு அலங்கார சேவையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த சனி பெயர்ச்சி விழாவில் மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சகம், ரிஷபம், சிம்மம் ஆகிய ராசிகளைச் சேர்ந்தவர்கள் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் உள்ள நவக்கிரக கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜை செய்து வழிபட்டனர்.