< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|21 May 2022 10:22 PM IST
வைகாசி மாத முதல் சனிக்கிழமையொட்டி தர்மபுரி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தர்மபுரி:
வைகாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி தர்மபுரி எஸ்.வி. ரோடு அபய ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.