சேலம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் தரிசனம்
|புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேலம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமையில் பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதன்படி, புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் மூலவர் அழகிரிநாதருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தொடர்ந்து நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும், ஆஞ்சநேயர், பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. இதுதவிர, கோவில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாண்டுரங்கநாதர் கோவில்
இதேபோல், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி ருக்மணி, ஆண்டாள், பாண்டுரங்கநாதருக்கு தங்க கவசம் சாத்துப்படி செய்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கடைவீதி வேணுகோபலசுவாமி, ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயணசாமி, பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில், சின்னதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், குரங்குச்சாவடி கூசமலை பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
அம்மாப்பேட்டையில் சிங்கமெத்தை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. மேலும், முராரி வரதைய்யர் தெருவில் வெங்கடேஸ்வர சுவாமி, பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஜாரி கொண்டலாம்பட்டி
சேலம் ஜாரி கொண்டலாம்பட்டி நடுதெருவில் உள்ள நைனாமலை வரதராஜபெருமாள் சிறப்பு பூைஜ நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.