< Back
மாநில செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேய்பிறை அஷ்டமியையொட்டிகாலபைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
8 Aug 2023 7:45 PM GMT

கிருஷ்ணகிரி

தேய்பிறை அஷ்டமியையொட்டி, காலபைரவர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தன.

தேய்பிறை அஷ்டமி

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், காலபைரவ மகா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும், தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டன. பகல், கால பைரவர் உற்சவமும், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தன.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணியில் விளக்கேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை, 165 கிராமங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

தட்சண கால பைரவர்

இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த சூரன் குட்டையில் உள்ள தட்சண காலபைரவர் கோவில் மற்றும் கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. இதேபோன்று மாவட்டத்தி்ல உள்ள அனைத்து காலபைரவரர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்