கிருஷ்ணகிரி
சனி பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் பங்கேற்பு
|ஓசூர்
சனி பிரதோஷத்தையொட்டி ஓசூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில், நெசவுத்தெருவில் உள்ள சோமேஸ்வரர் கோவில், காமராஜ் காலனியில் உள்ள காசி விசுவநாதர் கோவில், ராம்நகரில் உள்ள சொர்ணாம்பிகை சமேத சோமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கும், நந்திக்கும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர், இளநீர், குங்குமம் மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி ஆகியவற்றால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர், சிவன், நந்தி உள்ளிட்ட உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைெபற்றது. பின்னர் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலம் வந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.