< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சக்கர நாற்காலி
|15 May 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு சிறப்பு சக்கர நாற்காலியை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
திருக்கோவிலூர் அருகே கொழுந்தராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மகன் திவாகர் (வயது 8) என்ற சிறுவன் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதையடுத்து இவனது பெற்றோர், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து தங்களது மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவினை பரிசீலனை செய்த கலெக்டர் உடனடியாக மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு வழங்கினார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.