< Back
மாநில செய்திகள்
சிறப்பு கிராம சபை கூட்டம்
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

சிறப்பு கிராம சபை கூட்டம்

தினத்தந்தி
|
17 Sept 2023 12:30 AM IST

வைத்தீஸ்வரன் கோவிலில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது

சீர்காழி;

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு வீதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் அசோகன், துணைத் தலைவர் அன்புச்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தார். கூட்டத்தில், ரூ.20 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை உடனே பேரூராட்சி பகுதியில் செயல்படுத்துவது, அனைத்து பயனாளிகளும் குடிநீர் இணைப்புகளை பெற விண்ணப்பம் செய்வது, வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் மயிலாடுதுறை சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க கேட்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், தி.மு.க. நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ராமலிங்கம், கமலநாதன், துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேலும் செய்திகள்