ராணிப்பேட்டை
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
|சோளிங்கர் அருகே சிறப்பு கால்நடை மருத்துவ முகாமை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே ஜம்புகுளம் கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரும் ஒன்றிய செயலாளருமான டி.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு முறைகளை எடுத்துரைத்தார்.
மேலும் கால்நடைகளை சிறந்த முறையில் வளர்ப்பு மற்றும் பாராமரிப்பாளர்கள், அதிக பால் உற்பத்தியாளருக்கு ஊக்க பரிசுகளை வழங்கி பேசினார்.
முகாமில் கால்நடைகளுக்கு பொதுமருத்துவம், குடற்புழு நீக்குதல், நோய் தடுப்பூசி, சினைபிடிக்க சிகிச்சை, மலட்டுத்தன்மை போக்க சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளித்தனர்.
இதில் ஊராட்சி உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாடு, ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை ஆவின் உதவி பொதுமேலாளர் பானுமதி, தாசில்தார் ஆனந்தன், வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணி பெரியசாமி, சோளிங்கர் ஒன்றியக்குழு உறுப்பினர் சலங்கை மாரிமுத்து மற்றும் ஆவின், கால்நடை துறை மருத்துவர்கள், விவசாயிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்