< Back
மாநில செய்திகள்
சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்
அரியலூர்
மாநில செய்திகள்

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
23 Dec 2022 6:48 PM GMT

சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலையூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீத்அலி, உதவி இயக்குனர்கள் சொக்கலிங்கம், ரிச்சர்ட்ராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் கால்நடை மருத்துவர்கள் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகள் மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், நீண்ட நாள் சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை அளித்தனர். கால்நடை நோய் புலனாய்வு குழுவினர் மூலம் அப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு ரத்தம், சாணம், பால் ஆகியவற்றை சேகரித்து நோய் பரிசோதனை செய்தல் போன்றவையும் நடைபெற்றன. மேலும் கால்நடைகளுக்கு வரும் தொற்று நோய்கள் பற்றியும், அது வராமல் இருப்பதற்கான விளக்கங்களையும் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மூலம் விளக்கப்பட்டது. முடிவில் கிடாரிக்கண்ணு வளர்ப்பவர்களுக்கும், கால்நடை பராமரிப்பில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு வரும் தோல் கழலை நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்