< Back
மாநில செய்திகள்
தீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மாநில செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தினத்தந்தி
|
24 Oct 2022 5:45 AM IST

அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்