< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்
|22 Aug 2024 9:29 PM IST
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த மாதம் செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூரு வழியாக மைசூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது.