< Back
மாநில செய்திகள்
தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி, திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
மாநில செய்திகள்

தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி, திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Aug 2024 9:58 PM GMT

தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணி, திருச்சிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது .

சென்னை,

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழாவை முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து 28-ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.மேலும் தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தாம்பரத்தில் இருந்து 28-ம் தேதி இரவு 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் அதிகாலை 3.35 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து 31-ம் தேதி அதிகாலை 12.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 8.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுகம், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, பேரளம், திருவாரூா், நாகை வழியாக இயக்கப்படும். .

மேலும் : திருச்சியில் இருந்து 28-ம் தேதி பகல் 12 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மாலை 4.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து 30-ம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு மாலை 4.10 மணிக்கு சென்றடையும். இந்த ரெ ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும்.

மேலும் செய்திகள்