விருதுநகர்
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள்
|தொடர்விடுமுறை சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜயதசமி, ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ள நிலையில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வரவேண்டியநிலை உள்ளது. ஆனால் சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட ெரயில்களில் முன்பதிவு முழுமையாக முடிந்து விட்ட நிலையிலும், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையிலும் நடுத்தர வர்க்கத்தினர் கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மிகுந்த சிரமப்படும் நிலை உள்ளது.
எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லா சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டியது அவசியமாகும். சென்னையில் இருந்து நாகர்கோவில் வரையிலும், சென்னையில் இருந்து செங்கோட்டை மார்க்கமாகவும் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட வேண்டும்.
இதேபோன்று விஜயதசமி விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு திரும்புவதற்கும் சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டியது அவசியமாகும். எனவே தென்னக ெரயில்வே நிர்வாகம் சென்னையில் இருந்து விஜயதசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு முன்பதிவு இல்லா சிறப்பு ெரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.