< Back
மாநில செய்திகள்
போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

தினத்தந்தி
|
13 April 2023 11:46 PM IST

போட்டித்தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு மார்ச் 4-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் மே மாதம் 6-ந் தேதி வரை திறமையான ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும் சிறப்பு பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியில் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் இதர பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடத்திட்டங்கள், மாதிரி தேர்வுகள் போன்றவை குறித்தும், மாணவர்கள் இந்த சிறப்பு பயிற்சி வகுப்பினை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கற்பகம் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முத்துக்குமார், ரமேஷ், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்