< Back
மாநில செய்திகள்
ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்த சிறப்பு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்த சிறப்பு பயிற்சி

தினத்தந்தி
|
1 March 2023 6:45 PM GMT

பார்வை திறன் குறைபாடுடைய ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி முதன்மைகல்வி அதிகாரி தலைமையில் நடைபெற்றது.


பார்வை திறன் குறைபாடுடைய ஆசிரியர்களுக்கு கணினி பயன்படுத்துவது குறித்த சிறப்பு பயிற்சி முதன்மைகல்வி அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

கற்றல் கற்பித்தல் செயல்பாடு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் பார்வை திறன் குறைபாடுடைய 35 ஆசிரியர்களுக்கு சிறப்பு திறன் மேம்பாட்டு தகவல் தொழில்நுட்ப 2-ம் கட்டப்பயிற்சி சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் பேசியதாவது:-

ஆசிரியர்கள் எப்போதும் நதி போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் மற்றும் இன்றைய நவீன உலகில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மாணவர்களுக்கு புரியும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்றார்.

பயிற்சி

இந்த பயிற்சியை ஹோப் தொண்டு நிறுவன தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள். பிரதீப் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் வழங்கினார்கள். இப்பயிற்சியில் பார்வையற்ற ஆசிரியர்கள் எவ்வாறு கணினியை பயன்படுத்துவது, மென்பொருள் பயன்பாடுகள், இணையத்தை அணுகுதல், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் போன்றவை சார்பாக பயிற்சி வழங்கப்பட்டது.

கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர்கள் சீதாலெட்சுமி மற்றும் பீட்டர் லெமாயு ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் செய்திருந்தார்.

மேலும் செய்திகள்